சந்தா கொச்சார் மீதான ஊழல் புகார் எதிரொலி - புதிய சிஓஓவை நியமித்தது ஐசிஐசிஐ வங்கி...!

ஐசிஐசிஐ வங்கியின் புதிய முழுநேர சிஓஓவாக சந்தீப் பாக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சந்தீப் பாக்ஷி

கடந்த 2012-ம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ தலைமையிலான வங்கி கூட்டமைப்பு ரூ.3,250 கோடி கடன் கொடுத்தது. 5 வருடங்களுக்கு மேலாகியும் ரூ.2800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் வங்கி இக்கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, இந்தக் கடன் விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கொச்சார் பெயர் அடிபடத் தொடங்கியது. காரணம் சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது எனத் தகவல் வெளியானதுதான். 

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீபக் கொச்­சாரி­டம் சிபிஐ விசா­ரணை நடத்தி வரு­கிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க வங்கியின் இயக்குநர் குழு நேற்று கூடியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி  ``ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த பிரத்யேக குழு அமைக்கப்படும். இந்தக் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார். அதுவரை ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி செயல்படுவார். இவர் முழுநேர சிஓஓவாக இருப்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தீப் பாக்ஷி  ஐசிஐசிஐ புரூடன்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!