வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:02 (20/06/2018)

கேரளாவில் ஆர்டர்லி அடிமைப் பணிக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

கேரளாவில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆர்டர்லி அடிமைப் பணிக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

போலீஸ் உயரதிகாரிகளின் வீடுகளில் பணிபுரிய ஆர்டர்லியாக ஏராளமான போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். நான்கு நாள்களுக்கு முன், கேரள போலீஸ் கூடுதல் ‘டி.ஜி.பி., சுதேஷ்குமாரின் மகள் ஸ்னிக்தா என்பவர், ஆர்டர்லியாகப் பணிபுரிந்த ஓட்டுநர் கவாஸ்கரை  கடுமையாகத் தாக்கினார். கேரளாவில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆயுதப்படை பிரிவின் தலைவராக இருந்த சுதேஷ்குமார், பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

போலீஸ்

File Photo

இந்தச் சம்பவம்குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சபரிநாதன், கேரள சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், ''ஜூனியர் போலீஸ்காரர்களை ஆர்டர்லியாகப் பணியாற்ற வைக்கும் முறை பல ஆண்டு காலமாக கேரளத்தில் நடைமுறையில் உள்ளது. பிரிட்டிஷார் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஆர்டர்லி முறை, இப்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. ஆர்டர்லி முறை, கேரளத்திலிருந்து முற்றிலும் அகற்றப்படும். ஆர்டர்லி முறை விரும்பத்தகாத மனித உரிமைக்கு எதிரான செயல். போலீஸ் துறை, ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்  துறை. இங்குதான் ஆர்டர்லி என்ற முறையில் மனித உரிமைக்கு விரோதமான செயல்கள் நிகழ அனுமதிக்கப்படுகிறது. ஸ்னிக்தா மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். 

இதையடுத்து, கேரள டி.ஜி.பி., லோக்நான் பொக்ரா, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் வீட்டில் பணியில் உள்ளவர்களைக் கணக்கெடுத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளச் சென்ற ஸ்னிக்தாவை அழைத்துச்செல்ல கவாஸ்கர் காரில் சென்றுள்ளார். தாமதமாக வந்த காரணத்தால், ஓட்டுநர் கவாஸ்கரை பொது இடத்தில் வைத்து தகாத முறையில் திட்டியதோடு, செல்போனால் காது ஓரத்தில் அடித்துள்ளார். கவாஸ்கர், போலீஸில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க