'பசுவைக் கடத்த வந்ததாக நினைத்துவிட்டனர்!' - உ.பி-யில் நடந்த கொடூரம் | One person beaten to death over cow slaughter rumours

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:01 (20/06/2018)

'பசுவைக் கடத்த வந்ததாக நினைத்துவிட்டனர்!' - உ.பி-யில் நடந்த கொடூரம்

பசுவைக் கடத்த வந்ததாக நினைத்து இரண்டு நபர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று. இதில், பலத்த காயமடைந்த காசிம் என்பவர் உயிரிழந்தார். 

பசு

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹாப்பூர் பகுதியில், கடந்த திங்கள்கிழமையன்று பசுவைக் கடத்த வந்தவர்கள் எனச் சந்தேகப்பட்டு, காசிம் (45) மற்றும் சமயூதின் (65) என்ற இரண்டு நபர்களை அப்பகுதி மக்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்து, அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், அவர்களை மீட்டு அருகில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பசுவைக் கடத்த வந்தவர்கள் எனத் தவறுதலாக எண்ணி காசிம், சமயூதின் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காசிம், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். அவருடன் தாக்குதலுக்கு ஆளான சமயூதின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார். இந்தத் தாக்குதல் காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படித்தவை