ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லையா? - கொந்தளிக்கும் நவீன் பட்நாயக்

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். 

நவீன் பட்நாயக்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. இது, எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. ஆனால், அரசு இதழில் ஹாக்கியை அதிகாரபூர்வமாக தேசிய விளையாட்டு என்று அறிவிக்கவில்லை. அதனால், `தேசிய விளையாட்டு ஹாக்கி' என அறிவிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். 

அவரின் கடிதத்தில், `ஹாக்கி உலகக்கோப்பை போட்டி வரும் நவம்பர் மாதத்தில் ஒடிசாவில் தொடங்க உள்ளது. உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோதுதான் தெரியவந்தது, தேசிய விளையாட்டு என்று எல்லோராலும் அறியப்பட்ட ஹாக்கி, தேசிய விளையாட்டாக அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. இதனால், ஹாக்கி ரசிகர்களின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே, தேசிய விளையாட்டு ஹாக்கி என அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!