`பூடானிடமிருந்து பாடம் கற்குமா இந்தியா?' - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் | india tops in environmental conflicts in Asia

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (21/06/2018)

`பூடானிடமிருந்து பாடம் கற்குமா இந்தியா?' - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நாடுகளில் ஆசிய அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்காத பூடான் நாடு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

`பூடானிடமிருந்து பாடம் கற்குமா இந்தியா?' - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நாடுகளில் ஆசிய அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்காத பூடான் நாடு, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் திட்டங்கள்

ENVIRONMENT JUSTICE ATLAS -  அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், 271 சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளுடன் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அணுமின்நிலையம், சுரங்கத் தொழில், அனல்மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக, இந்தியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரிய நாடான சீனா  76 பிரச்னைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அணைகள் கட்டுவது, தாமிரத் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்னைகள் இந்த நாட்டில் உள்ளன. 

இந்தோனேஷியாவும் பிலிப்பைன்ஸும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. இலங்கைக்கு 5-வது இடம். ஜப்பானுக்கு 6-வது இடம். நேபாளத்தில் நீர் மேலாண்மை தொடர்பான ஒரு சுற்றுச்சூழல் பிரச்னையும், மாலத்தீவில் ஒரு சுற்றுச்சூழல் விவகாரமும் உள்ளன. 

சுற்றுச்சூழலுக்குக் கேடே விளைவிக்காத நாடாக ஆசியாவில் பூடான் விளங்குகிறது. ‘ஆசியாவின் 'ஸ்விட்சர்லாந்து ' என்று இந்த நாட்டை அழைப்பார்கள். மன்னர் ஆட்சி முறையில் மக்கள் மிக எளிமையாக வாழ்கின்றனர். மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. மீத்தேனும் கிடையாது, அணு ஆயுதமும் தயாரிக்காது, எந்த நாட்டுடனும் போரும் புரியாது. விவசாயம்தான் முக்கியத் தொழில். நாட்டில் குவிந்து கிடக்கும் இயற்கை வளத்தைக் காப்பதோடு, நாட்டின் வளத்தை பொருளாதாரத்துக்கு உகந்த வகையில் எப்படி மாற்ற முடியும் என்பதில் பூடானியர்கள் மிகத் தெளிவு. 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம்

 

நாட்டில் 50 சதவிகித வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை. காடுகளை அழித்துவிட்டு இஷ்டத்துக்கு கட்டடங்களைக் கட்டிவிட முடியாது. காடுகள் மட்டும்தான் அமைதியைத் தர முடியும் என்பது பூடானின்  நம்பிக்கை.  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் பூடானியர்கள் செய்துவிடுவதில்லை. மக்கள் மகிழ்ச்சியைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு கையில் எடுப்பதில்லை.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் வாழ்வது எப்படி... சேலத்துக்கு நான்கு வழிச் சாலை போடத் துடிக்கும் தமிழக அரசு, பூடானிடமிருந்து  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க