நடுவானில் பத்மாசனம், நமஸ்காரம்! - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நடுவானில் யோகாசனம் நிகழ்த்தியுள்ளனர் இந்திய விமானப் படை வீரர்கள். 

நடுவானில் நமஸ்காரம் செய்யும் இந்திய விமானப் படை வீரர்

ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, 'யோகா பயிற்சியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு, பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, ' ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

நடுவானில் பத்மாசனம் செய்யும் இந்திய விமானப் படை வீரர்

நேற்று நான்காம் ஆண்டு யோகா தினத்தையொட்டி டெல்லி, மும்பை, சென்னை என முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த முகாமில், பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இதற்கிடையில், இந்திய விமானப் படை வீரர்களும் யோகா தினத்தையொட்டி, 15,000 அடி உயரத்துக்குமேல் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்து, நடுவானில் யோகாசனம் செய்து அசத்தியுள்ளனர். நடுவானில் பத்மாசனம் மற்றும் நமஸ்காரம் உள்ளிட்ட யோகாசனங்களைச் செய்யும் புகைப்படங்களை இந்திய விமானப்படை நிர்வாகம்,  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!