சிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை! - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்

தோட்டத்தில் மாங்காய் பறித்ததற்காக 10 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுவன்

Representational Image
 

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் பத்ரஹா என்னும் கிராமத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தீபக் குமார் என்னும் காவலர் இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `சத்யம் குமார் என்னும் 10 வயது சிறுவன் நேற்று (21.06.2018) மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையத்தின் முகப்பில் இருந்த மாங்காய் தோட்டத்தில்  மாங்காய் பறிக்க  சிறுவர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது மாங்காய் தோட்டத்துக்கு காவலுக்கு இருந்த வாட்ச்மேன் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் சத்யம் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வாட்ச்மேன் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்’ என்று குறிப்பிட்டார். 


உயிரிழந்த சிறுவன் சத்யம் குமாரின் தந்தை மகுனி யாதவ் அளித்த பேட்டியில், `என் குழந்தையை மாங்காய் பறித்தற்காக கொன்றுவிட்டனர். அவனுடன் விளையாடச் சென்ற நண்பர்கள் வீட்டுக்கு வந்து தகவல் சொன்ன பிறகு, சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது என் குழந்தை உயிரற்றுக் கிடந்தான். அவனைச் சுட்டுக்கொன்ற வாட்ச்மேன் ராமஷிஷ் யாதவ் தப்பியோடிவிட்டார்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!