'குழந்தைக்கு பாலூட்டும் அட்டைப்படம் ரவிவர்மா ஓவியம்போன்று தெரிகிறது' - கேரள உயர்நீதிமன்றம்

குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட பெண்கள் இதழ் மீது அளித்த புகாரை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட பெண்கள் இதழ் மீது அளித்த புகாரை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கிருஹலெட்சுமி மலையாள பெண்கள் இதழில் கேரள மாடல் ஜிலு ஜோசப் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. 'உற்றுப் பார்க்காதீர்கள். நாங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்' என்ற வாசகத்துடன் வெளியான இந்த படம் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தத்தான் இந்தப் படம் வெளியிடப்பட்டதாக அந்த இதழ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் புகைப்படம் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும், இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெலிக்ஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒவ்வொரு நபருக்கும் பார்வை வித்தியாசப்படும் எனவும், ஒருவருக்கு பாலியல் ரீதியாக தோன்றும் காட்சி மற்றொருவருக்கு கலையாக தெரியும். ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்ப்பது போன்றுதான் இந்தப் படத்தையும் பார்க்கிறோம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!