இந்த இடங்களில் செல்ஃபி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம்!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்

ஸ்மார்ட் போன்களின் வருகை அதிகரித்ததிலிருந்து செல்ஃபி எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. எங்கு சென்றாலும் செல்ஃபி, புதுமையாக எதைக் கண்டாலும் செல்ஃபி என தற்போதுள்ள இளைஞர்கள் செல்ஃபி மோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர். சில சமயங்களில் விளையாட்டாக எடுக்கப்படும் செல்ஃபி விபரீதத்தில் முடிந்த கதைகளும் உண்டு. இப்போதெல்லாம் செல்ஃபியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இதேபோன்று, ரயில் மோதி இறப்பவர்களைவிட தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதைத் தடுக்க, ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தண்டவாளங்கள், ரயில் படிக்கட்டுகள், ஓடும் ரயிலில் சாகச செல்ஃபி, ரயில் நிலைய நடை மேம்பாலங்கள் என எந்த இடத்திலும் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து,ரயில் நிலையங்களில் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் சில சிறப்பு ஊழியர்களையும் நியமித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!