வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (22/06/2018)

கடைசி தொடர்பு:19:31 (22/06/2018)

தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான அர்ஜென்டினா ரசிகர்!

தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அர்ஜென்டினா ரசிகர் மாயமாகியுள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான அர்ஜென்டினா ரசிகர்!

லகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரோஷிய அணியிடம் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதனால், கேரளாவில் அர்ஜென்டினா ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  நைஜீரியா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றிபெற்றாலும், பிற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற நிலை காணப்படுகிறது. கடும் வேதனையடைந்த கேரளாவைச் சேர்ந்த அந்த அணியின் தீவிர ரசிகர் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார். 

 

அர்ஜென்டினா

கோட்டயம் அருகேயுள்ள அருமானூர் பகுதியைச் சேர்ந்த டினு அலெக்ஸ் (வயது 30) என்பவர், மெஸ்ஸி அணியின் தீவிர ரசிகர். நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், குரோஷிய அணி அர்ஜென்டினா அணியைத் துவம்சம் செய்ததைக் காண முடியாமல் புலம்பியுள்ளார்.  நண்பர்கள் அவருக்கு ஆறுதல் அளித்துத் தேற்றியுள்ளனர். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5 மணியளவில் இருந்து அவரைக் காணவில்லை. தற்கொலை செய்துகொள்வதாக  டினு எழுதிய கடிதம், அவரின் அறையில் கிடைத்தது. ஆற்றில் விழுந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மீனாச்சல் ஆற்றில் சடலத்தைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க