`உங்களது செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு' - ஆலப்புழா கலெக்டருக்கு குவியும் பாராட்டு!

கேரளா அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து உணவை ருசி பார்த்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

கலெக்டர் எஸ் சுஹாஸ்

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம் நீர்க்குன்னம் பகுதியில் ஸ்ரீ தேவி விலாசம் என்ற அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்குத்  தரமான கல்வி மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. அதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள வசதி படைத்தவர்களும் தங்கள் பிள்ளைகளை ஸ்ரீ தேவி விலாசம் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். 

இந்நிலையில், சிறப்பாக இயங்கிவரும் பள்ளியின் தரத்தை மேம்படுத்த, மாவட்ட கலெக்டர்  எஸ். சுஹாஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் அமைதியாக அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட சுஹாஸ், அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து சத்துணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின்,  `உணவு தரமாக சமைக்கப்பட்டதாகவும் இதேப்போன்று தரமான உணவை மட்டும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என்று ஆசிரியர்களிடம் தெரிவித்து சென்றுள்ளார்.

கலெக்டர் எஸ் சுஹாஸ்

இதனையடுத்து, தான் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் கலெக்டர். `உங்களது செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது; மகத்தான சேவை' என்று பதிவிட்டு ஆயிரக்கணக்கானோர் சுஹாஸை பாராட்டி, அவரின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!