`மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்!’ - ம.பியில் விநோதம் | Wedding of two frogs ritual held in Chhattarpur

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:16:00 (24/06/2018)

`மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்!’ - ம.பியில் விநோதம்

பருவமழை சரியாக பெய்ய வேண்டும் என தவளைக்கு திருமணம் செய்து வைத்து வழிபாடு செய்துள்ளனர் மத்தியப்பிரதேச மக்கள். 

திருமணம்

Photo Credit: ANI

மத்தியப்பிரதேச மாநிலம் சட்டர்பூர் நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், `உரிய காலத்தில் பருவமழை பொழிய வேண்டும்' என்று நூதன முறையில் வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பெண் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள பா.ஜ.க-வை சேர்ந்த லலிதா யாதவ், `அசாத் உட்சவ்' வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்தப் பூஜையில், இரண்டு தவளைகளை மணக்கோலத்தில் அலங்கரித்து, திருமணச் சடங்குகள் செய்து, சிவப்பு கயிறு கட்டி திருமணம் முடித்து வைத்தனர்.

திருமணம் மழை

Photo Credit: ANI

இது குறித்து அமைச்சர் கூறுகையில், `வறட்சியால் புண்டேல்கண்ட் பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தவளைகளுக்குத் திருமணம் முடித்து வைத்தோம். இவ்வாறு செய்தால் நிச்சம் மழைபெய்யும் என நம்பப்படுகிறது. நமது விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்துள்ளோம்' என்றார்.