ரூ.42 கோடி வரி பாக்கி! ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | Income tax Department sent a notice to Robert Vadra

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:45 (25/06/2018)

ரூ.42 கோடி வரி பாக்கி! ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராபர்ட் வத்ரா

சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் நீண்ட நாள்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி பல்வேறு வழக்குகளைச் சந்தித்தவர். கடந்த 2005 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ராபர்ட் வதேரா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மோசடி நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தது. பின்பு, பா.ஜ.க ஆட்சியில் இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், நிலமுறைகேடு தொடர்பாகப் பல வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மூலம் வந்த வருமானத்தை மறைத்ததாகவும், இதனால் ரூ.42 கோடி வரி கட்ட வேண்டும் எனவும் வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு உரிய வரியை 30 நாள்களுக்குச் செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.