ஃப்ளிப்கார்ட்டில் புகார்... வந்தது பா.ஜ.க உறுப்பினர் மெசேஜ்... அதிர்ந்துபோன வாலிபர்

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், புகார் தெரிவிப்பதற்காக ஃப்ளிப்கார்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த இலவச நம்பரைத் தொடர்புகொண்டபோது, அவருக்கு பா.ஜ.க-வில் உறுப்பினராக சேர்ந்ததாக மெசேஜ் வந்துள்ளது. அதனால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

ப்ளிப்கார்ட்

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃப்ளிப்கார்ட்டில் ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு, ஹெட்போனுக்குப் பதில் எண்ணெய்ப் பாட்டில்தான் வந்துள்ளது. உடனே அவர், ப்ளிப்கார்ட் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, ஒரு ரிங்கில் கட்டாகியுள்ளது.

போன் துண்டிக்கப்பட்ட அடுத்த விநாடி, பா.ஜ.க-வில் இணைந்ததற்கு நன்றி என்று பா.ஜ.க உறுப்பினர் எண்ணும் அளிக்கப்பட்டு மெசேஜ் வந்துள்ளது. குழம்பிய அவர், அவருடைய நண்பர்களுக்கு இந்த எண்ணைக் கொடுத்து, போன் செய்யச் சொல்லியுள்ளார். அவர்களுக்கும் இதேபோன்று மெசேஜ் வந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ், 'பா.ஜ.க தொடர்பான எண், பேஸ்புக், இணையதளங்களில் கிடைக்கிறது. ஃப்ளிப்கார்ட் விவகாரத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று தெரிவித்தார். 
இதுகுறித்து தெரிவித்த ஃப்ளிப்கார்ட், 'அந்தக் குறிப்பிட்ட எண்ணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துவிட்டோம். அப்போது, பேக்கிங் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் டேப்பின்மீது அந்த எண்ணும் சேர்த்து பிரிண்ட் செய்யப்பட்டது. அந்த மீதமிருந்த டேப் தற்போது உபயோகப்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

Pic Courtesy: NDTV 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!