கேரளாவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மாயம்! | 11 people including children of two families missing from Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (27/06/2018)

கடைசி தொடர்பு:15:40 (27/06/2018)

கேரளாவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மாயம்!

கேரள மாநிலம் காசர்கோட்டில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 11 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதில் சிலர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மாயம்

காசர்கோடு செம்மநாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் துபாய் செல்வதாக கூறிச்சென்ற தனது மகள் நஸீறா(25), அவரது கணவர் ஸவாத்(35), இவர்களின் மகள்கள் முஸப்(6), மர்ஜானா(3), பிறந்து 11 மாதங்களே ஆன முஹமில் மற்றும் ஸவாத்தின் இரண்டாவது மனைவி றஹானத்(25) ஆகியோரைக் காணவில்லை என்று புகார் அளித்தார். கடந்த 15-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இவர்கள் 6 பேரும் துபாய்க்குச் சென்று சேரவில்லை என அந்த நாட்டில் வசிக்கும் உறவினர்கள் தெரிவித்ததாகவும் அப்துல்ஹமீது தெரிவித்தார். அப்துல்ஹமீதிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அணங்கூரில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஏற்கெனவே மாயமாகியிருப்பது குறித்து போலீஸுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'மாயமான 5 பேரில் சிலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. 6 பேருடன் துபாய் போவதாக புறப்பட்டுச்சென்ற ஸவாத் ஏற்கெனவே துபாயில் மொபைல் ஷோரூமில் வேலை செய்துவந்தார். இவர் ஓமன் வழியாக ஏமன் நாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவர்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றனர். காசர்கோட்டில் இரண்டு குடும்பங்களில் 11 பேர் மாயமான சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


[X] Close

[X] Close