`தண்ணீர் கசிந்தால் அலெர்ட் செய்யும் #WaterCops’ - உ.பி மாணவர்களின் `வாவ்’ ஐடியா! | UP students invented new system which alerts when water leaks

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (27/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (27/06/2018)

`தண்ணீர் கசிந்தால் அலெர்ட் செய்யும் #WaterCops’ - உ.பி மாணவர்களின் `வாவ்’ ஐடியா!

தண்ணீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், வாஷ் பேஸினில் உபயோகப்படுத்தும் நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தவும் நீர் சுத்திகரிப்பு வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது இந்தக் கண்டுபிடிப்புக்கு (water cops) `தண்ணீர் காவலர்கள்’...

 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாஷ் கண்ணா, தனூஜ் டான்டன் ஆகியோர் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நவீன வாஷ் பேஸினை வடிவமைத்துள்ளனர்.  

மொராதாபாத், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் (Electronic And Communication) படிக்கும் இரு மாணவர்கள் உருவாக்கியதுதான் இந்த `ஸ்மார்ட் வாஷ் பேஸின்’. பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் வழக்கமான வாஷ் பேஸின்போலவே இருக்கும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் நவீன கருவியின்மூலம் வாஷ் பேஸின் குழாய் திறந்து தண்ணீர் கசிந்தால், உடனே அதன் பாதுகாவலரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலெர்ட் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

தண்ணீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், வாஷ் பேஸினில் உபயோகப்படுத்தும் நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தவும், நீர் சுத்திகரிப்பு வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது இந்தக் கண்டுபிடிப்புக்கு (water cops) `தண்ணீர் காவலர்கள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குழாய் வழியாக மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் வடிந்து வீணாவதைத் தடுக்க இது ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.  

இந்த புராஜெக்ட்டுக்கு வழிகாட்டிய பேராசிரியர் க்ஷிட்டிஜ் ஷிங்கால் (Kshitij shinghal) Associate professor, Moradabad institute of technology) இது பற்றிக் கூறுகையில் மருத்துவமனை, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வாஷ் பேஸின் குழாய்களில் வடியும் தண்ணீர் பிரச்னைகளைச் சரிசெய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும். தண்ணீரையும் சேகரிக்க முடியும்" என்று கூறினார்.

இந்தியாவில் தண்ணீர்த் தேவையும் பற்றாக்குறையும் அதிகமாகவே உள்ளன. இது, தண்ணீரைப் பாதுகாக்கவேண்டிய நேரம். ஏற்கெனவே நாம் தண்ணீர் சேகரிப்பதில் காலதாமதம் ஆக்கிவிட்டோம். இந்த ஸ்மார்ட் வாஷ் பேஸின் தண்ணீர் சேகரிப்பதுடன், பாரம்பர்யமாகத் தண்ணீர்ச் சுத்திகரிப்பு முறையான மண் போன்றவற்றைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்திய நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர். இந்தக் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது.

Video courtesy: ANI
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close