அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு! | Rupee value get down against US dollar

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (28/06/2018)

கடைசி தொடர்பு:13:35 (28/06/2018)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயாக சரிந்துள்ளது. இது வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க டாலர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு 68.73 ரூபாயாக இருந்தது. இந்த அளவுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்தபட்ச அளவாக இருந்தது. இன்று அதைவிட குறைந்து 68.89 ரூபாய்க்கு வந்துள்ளது. நேற்று, 68.61 ரூபாயாக இருந்த நிலையில், 37 காசுகள் குறைந்து 68.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த தொழில்துறை வல்லுநர்கள், `இந்த விவகாரத்தில் ஆர்.பி.ஐ தலையிட்டு பணத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டும். தற்போதைய நிலை தொடரும் பட்சத்தில் பணத்தின் மதிப்பு 70 ரூபாய்க்கு மேல் செல்லும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்தியாவில் நிரந்தர முதலீடு குறைவது, மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளனர். 


[X] Close

[X] Close