பேட்ஜ் போடும் சிக்கல் இனி இல்லை... உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது கர்நாடகா!

கடந்த ஆண்டு ஜூலை மாதம், டாக்ஸி ஓட்டுவதற்கு பேட்ஜ் போட்டு தனி கமர்ஷியல் லைசென்ஸ் எடுக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்துத் துறையும், டாக்ஸி ஓட்டுவதற்கு சாதாரண  LMV உரிமம் போதுமானது. இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. தற்போது, இந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகா இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

கர்நாடகா டாக்ஸி டிரைவர்களுக்கு இதே நிலமைதான்.

ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் மட்டுமே கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள், தங்கள் டாக்ஸியை ஓட்டலாம் என்று கூறியிருக்கிறார்கள். சீக்கிரமே அனைத்து டாக்ஸி நிறுவனங்களும் இதைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கேரளாவில் பென்கள் மட்டுமே ஓட்டும் ஷீ டாக்ஸி

கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு பேட்ஜ் போடவேண்டியது அவசியம். இதற்கு, ஓட்டுநர்கள் ஒரு வருடம் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது. எடையை ஏற்றிக்கொண்டு செல்லும் பெரிய வாகனங்களை ஓட்டுவதற்கு, அதில் இருக்கும் எடையையும் அதன் தன்மையும் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், டாக்ஸியை பொறுத்தவரை பிரைவேட் கார் ஓட்டுபவர்களே டாக்ஸியை ஓட்டலாம் என்பதால், கமர்ஷியல் உரிமம் தேவையற்றதாகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் வாங்கும் சிக்கல் இல்லை என்பதால், அதிக டாக்ஸி ஓட்டுநர்கள், குறிப்பாக பகுதி நேர ஓட்டுநர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால், பொது போக்குவரத்து அதிகரிக்கும்.

டாக்ஸி

தற்போது, கர்நாடகம் மட்டுமே அமல்படுத்தியிருக்கும் இந்த முயற்சியை விரைவில் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களும் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!