வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (28/06/2018)

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்..! ஸ்வீட்ஸ் கொடுத்து வழியனுப்பிய இந்திய ராணுவம்

இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுவன், பாதுகாப்பாக அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டான். 

இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகம்மது அப்துல்லா. அவனுக்கு வயது 11. அந்தச் சிறுவன், நான்கு நாள்களுக்கு முன்னர், தவறுதலாக இந்திய எல்லைப் பகுதியான பூன்ஞ் மாவட்டத்துக்குள் நுழைந்துவிட்டான். அந்தச் சிறுவனை இந்திய ராணுவத்தினர் தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர். பின்னர், அதேநாளில், காஷ்மீர் மாநில காவல்துறையிடம் அவனை ஒப்படைத்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்தச் சிறுவனுக்கு உடை, இனிப்புப் பண்டங்கள் வாங்கிக்கொடுத்து, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.