யாரும் செல்லாத நிலவின் மறுப்பக்கம்! - பயணிக்கத் தயாராகும் இந்தியா

நிலவின் தென் பகுதிக்குப் பயணிக்கும் புதிய ரோவரை இந்தியா விரைவில் தயாரிக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO)  விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகள் செய்யத் தயங்கும் சில துணிச்சலான விஷயங்களை நிகழ்த்திக்காட்டி பெரும் சாதனை  படைத்துள்ளது. தற்போது அடுத்த சாதனையாக, உலக நாடுகள் எதுவும் இதுவரை செல்லாத நிலவின் மறுபகுதியான தெற்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரோ தயாராக உள்ளது. இஸ்ரோ தலைவர் கே. சிவன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நிலவின் முன் பகுதியில் மட்டுமே இதுவரை உலக நாடுகள் ஆராய்ச்சி  நடத்தியுள்ளன. ஆனால், அதன் தென் பகுதிக்கு இதுவரை எந்த நாட்டு  செயற்கைக்கோளும் பயணித்தது இல்லை. அங்கு, விலை உயர்ந்த அணு எரிபொருளான ஹீலியம்-3 நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது.  இதனால், அந்தப் பகுதியில் ஆராய்ச்சி நடத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. இதற்கு, இந்தியப் பண மதிப்பில் ரூ.125 மில்லியன் வரை  செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

நிலவு

ஹீலியம்-3 மூலம், மாசு இல்லாத அணுமின்சாரத்தைத் தயாரிக்க முடியும். இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றிபெற்றால்,  நிலவில் இருக்கும் ஹீலியம் மூலம் மின்சாரம் தயாரித்த முதல் நாடு என்ற  பெருமையை இந்தியா பெறும். மேலும், அடுத்து வரும் 250 ஆண்டுகளுக்கு பூமியில் எந்தத் தடையும், செலவும் இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!