வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (28/06/2018)

`இனி ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து அலுவலகத்துக்கு வரக்கூடாது' - அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் அரசு!

கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களும் இனி ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரக்கூடாது என ராஜஸ்தான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. 

வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் மாநில முதல்வராக பா.ஜ.க-வின் வசுந்தரா ராஜே பதவியேற்ற பின், அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அந்த வகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன், அவரது அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்று கடும் சர்ச்சைகளைச் சந்தித்தது. அது, மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து செல்லக் கூடாது என்பதுதான். இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழவே, போராட்டங்கள் வலுத்தன. எனினும், தனது உத்தரவில் இருந்து வசுந்தரா ராஜே அரசு பின்வாங்கவில்லை. இந்நிலையில், இதேபோல ஒரு உத்தரவு அரசு ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரக்கூடாது என அம்மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்துக் கூறியுள்ள தொழிலாளர் நலத்துறை, ``சில ஊழியர்கள் அரசு அலுவலகத்துக்கு வரும்போது ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் கன்னியக்குறைவான ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இதனால், தேவையில்லாத பிரச்னைகள் உருவாகிறது. இதைத் தடுக்கும்பொருட்டே அதிகாரிகள் நாகரிகமான உடைகளை அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க