`சுவிஸ் வங்கிகளில் ரூ.7,000 கோடி டெபாசிட்' - அதிகரிக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் 45 சதவிகிதம் குறைந்திருந்த நிலையில், 2017-ல் 7,000 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.

கறுப்பு பணம்

சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மூன்று சதவிகிதம் அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2014 -2016 ஆகிய 3 ஆண்டுகளின் குறைந்திருந்தது. ஆனால், 2017-ம் ஆண்டில் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதன்படி, சுவிஸ் வங்கியில் நேரடியாக இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் தொகை ரூ.6,891 கோடி.

கறுப்புப் பணத்துக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முந்தைய மூன்று ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்த இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.4,500 கோடி அளவில் டெபாசிட் செய்வதை குறைந்திருந்தனர் இந்தியர்கள். 2015-ம் ஆண்டில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் தொகை 3 ல் ஒரு பகுதியாக குறைந்தது. அதிலும், 2014-ம் ஆண்டில் மட்டும் 10 சதவிகிதம் குறைந்தது. ஆனால், 2017-ம் ஆண்டில் 50.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், சுவிட்சர்லாந்து வங்கிகளின் லாபம் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!