3 மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து! -மத்திய அரசு பரிந்துரை

இனி தொடர்ச்சியாக மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.

ரேசன்

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்,`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ராம் விலாஸ் பஸ்வான்

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், `ரேஷன் பொருள்கள், உரிய பயனாளிகளுக்குத்தான் முறையாகச் சென்று சேர்கிறதா என்று மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதனால், மானிய விலையில் கிடைக்கும் பொருள்களை வாங்க அவசியமில்லாதவர்களை எளிதில் அடையாளம் காணலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் பட்டினிச் சாவு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!