கேரளாவில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு உறுதி..! கேரள அமைச்சர் தகவல்

கேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.

கே.கே.சைலஜா

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்டைமாநிலமான கேரளத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா-வைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.கே.சைலஜா, `கேரளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதியாகத் தெரிவித்துள்ளார். மோடி ஆட்சி முடிவதற்குள் கேரளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோழிக்கோடு மாவட்டம் கினாலூரில் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநிலத்துக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்தேன்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!