வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு! ராமநாதபுரத்துக்கு எந்த இடம்?

மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்

இந்திய மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் போன்ற அனைத்து வளர்ச்சிகளிலும் சிறந்து விளங்கும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் முதல் மே வரையிலான வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது.

வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிம் மாவட்டம், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், ஆந்திராவின் விஜயநகரம் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளன.

மேலும் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா, பீகாரின் பெகுசராய், காஹாடியா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மற்றும் சிம்தேகா ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கல்வியில் சிறந்து விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பட்டியலில் ஆந்திராவின் விஜயநகரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து குஜராத்தின் தாகோத், பீகாரின் அவுரங்காபாத், ஆந்திராவின் கடப்பா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மிகவும் பின் தங்கிய டெல்டா மாவட்டங்களை கண்டறிந்து அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட கணக்கீட்டுத் திட்டம் இது. இதில் தங்களுக்கு விருப்பமான மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்டன. கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள் மிகவும் தாமதமாக இதில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என நிதி ஆயோக் திட்டத்தின் செயல் அதிகாரி கந்த் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!