வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (30/06/2018)

அமலாக்கத் துறையிடம் பேரம் பேசினேனா?- விஜய் மல்லையா விளக்கம்

இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச்செலுத்த, அமலாக்கத் துறையிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரை மறுத்துள்ளார் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா

நிதி நெருக்கடியில் சிக்கிய விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஒன்பது ஆயிரம் கோடி அளவில் கடன் பெற்றார். இந்தக் கடனை திருப்பிச்செலுத்தாமல், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையில், விஜய் மல்லையா மீது சி.பி.ஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரது சொத்துகளை முடக்கினர். இதையடுத்து, வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்துவது தொடர்பாக, அமலாக்கத் துறையிடம் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கக் கோரி முறையிட்டதாகவும், அதற்காக அவர் பேரம் பேசியதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகியது.

இதற்கு, விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவரின் பதிவில், `சொத்துகளை விடுவிக்கக் கோரி அமலாக்கத் துறையினரிடம் பேரம் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. பேரம் பேசியதாக எழுந்த விவகாரத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன் தெரிவித்தால் அதை நான் வரவேற்கிறேன். முதலில், அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகையை முழுமையாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.