வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (01/07/2018)

கடைசி தொடர்பு:04:49 (01/07/2018)

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆதார்

ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பல்வேறு திட்டங்களுக்கான அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க  வேண்டும் என மத்திய அரசு கால அவகாசங்கள் வழங்கியது. அதேபோன்று நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று இது தொடர்பாக மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது . அதன்படி, ஜூன் 30 -ம் தேதி வரை பான் அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்படுகிறது. தற்போது 2019 ஆண்டு மார்ச் 31 தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மூன்று முறை ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த உத்தரவை மத்திய நிதித்துறை  அறிவித்துள்ளது.