வெளிப்படைத்தன்மை கொண்டது ஜி.எஸ்.டி..! ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம்

நாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதற்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மோடி

ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியைக் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைக் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய வரி சட்டம் மூலம், நாட்டில் அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை ஜி.எஸ்.டி நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. 

இந்நிலையில், ஜி.எஸ்.டி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், `வளர்ச்சி, எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டது ஜிஎஸ்டி. மேலும், இதன்மூலம், நாட்டில் ஒழுங்குபடுத்துதல் உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் மேம்படுத்துகிறது.வியாபாரம் செய்வது எளிதாகியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்துள்ளது' எனக் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!