`நாட்டின் ஜி.டி.பி 2025-ல் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும்!’ – குடியரசுத் தலைவர் நம்பிக்கை

2025- ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5லட்சம் கோடி டாலரை எட்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம்


இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிறுவன கூட்டமைப்பின்  70-ஆவது ஆண்டுகள் விழாவில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், `வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான அனைத்து திறன்களும் இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளது. வரி அமைப்பில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்' என அவர் தெரிவித்தார். மேலும் இதில் கலந்து கொண்ட மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி கூறுகையில், `கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதன் விளைவாக 2.25 லட்சம் போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுபோன்ற போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும' என தெரிவித்தார். இதையடுத்து பேசிய மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்  மனோஜ் சின்ஹா, `இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) 2.80 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக' தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!