வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (02/07/2018)

கடைசி தொடர்பு:01:30 (02/07/2018)

ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே!  எம்.பி-க்களுக்கு சபாநாயகர் உத்தரவு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் ஒரு நாளைக்கு  ஐந்து கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதிக்கப்படும் என்று சாபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் இதுவரை ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய உத்தரவால் இனி ஒரு நாளைக்கு ஒரு எம்.பி., ஐந்து கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்.

இதுகுறித்து  மக்களவை ( லோக்சபா ) பொதுச் செயலாளர் சினேகலதா ஶ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இப்போது, மக்களவையில் ஒரு நாளைக்கு ஒரு எம்.பி-க்கு 10 கேள்விகள் வரை கேட்க அனுமதி உள்ளது. இதனால், சில எம்.பி-க்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. எனவே, இனி ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி கொடுக்கப்படும். அதிக கேள்வி இருந்தால் அது அடுத்தநாள் சபையில் எடுத்துக் கொள்ள பரிசீலிக்கப்படும். எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு எம்.பி-யின், ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். இந்த உத்தரவு அடுத்த மக்களவைக் கூட்டத்தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  ஜுலை 18 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 18 நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க