வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (02/07/2018)

கடைசி தொடர்பு:18:07 (02/07/2018)

ராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை லதா ரஜினிகாந்த் இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.

லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று மும்பை சென்றுள்ளார். பயணத்தின்போது, கிருஷ்ணா குஞ்ச் குடியிருப்பில் உள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயின் இல்லத்துக்குச் சென்றார். ராஜ் தாக்கரே மற்றும் அவரின் மனைவி ஷர்மிளாவை நேரில் சந்தித்துப் பேசினார். `லதா ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது' என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ராஜ் தாக்கரேயின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியில், `புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று ராஜ் தாக்கரே மற்றும் அவரின் மனைவி ஷர்மிளாவை, அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு நட்பு ரீதியானது. சந்திப்பில் அரசியல், சினிமா  மற்றும் நிகழ்கால சமூகப் பிரச்னைகள் தொடர்பாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டது' என பதிவிடப்பட்டுள்ளது. இத்துடன், ராஜ் தாக்கரே மற்றும் அவரின் மனைவியுடன் லதா ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.