வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (03/07/2018)

கடைசி தொடர்பு:13:01 (03/07/2018)

டி.ஜி.பி-க்களை மாநில அரசு நியமிக்கக் கூடாது! `செக்' வைத்த உச்ச நீதிமன்றம்

டி.ஜி.பி-க்களை மாநில அரசுகள் நேரடியாக நியமிக்கக் கூடாது. யூ.பி.எஸ்.சியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம்

மாநில அரசுகள், அவர்கள் விருப்பப்படி டி.ஜி.பி-க்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரகாஷ் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாநில அரசுகள் இடைக்கால டி.ஜி.பி-க்களை நியமிக்கக் கூடாது. மேலும், டி.ஜி.பிக்களுக்கு அவர்களது பணிக்காலத்துக்குப் பிறகும் பணி நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது. டி.ஜி.பிக்களை மாநில அரசு நேரடியாக நியமிக்கக் கூடாது.

மாறாக, மத்தியக் குடியுரிமை தேர்வாணையத்துக்கு டி.ஜி.பிக்கான பெயர்களை மாநில அரசு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள்தான் டி.ஜி.பி-க்களைத் தேர்வு செய்வார்கள். பணியில் இருக்கும் டி.ஜி.பியின் பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, அடுத்த டி.ஜி.பிக்கான பெயர்களைப் யூ.பி.எஸ்.சிக்குப் பரிந்துரைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.