கேன்சரை குணப்படுத்துமா மாட்டுக் கோமியம்? - ஆய்வில் தகவல்

மாட்டுக் கோமியம் சில விதமான புற்றுநோய்களைப் போக்கும் என பல்கலைக்கழக ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கோமியம்


குஜராத், ஜுனகத் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்பவியல் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில் மாட்டுக் கோமியம், புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக வாய், கருப்பை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தோல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களைக் குணப்படுத்தும் எனக் கூறியுள்ளனர். சுமார் ஒரு வருடமாக நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் ஷிராதா பட், ``இது மிகவும் ஆபத்தான ஆய்வு. ஏனெனில்,  கேன்சர் செல்களை நேரடியாகப் பாட்டிலில் அடைத்து நாங்கள் சோதனை மேற்கொண்டோம். ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மாட்டுக் கோமியத்தின் சரியான அளவை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அடுத்ததாக இதை எலியை வைத்துப் பரிசோதனை செய்து, அது வெற்றிபெற்றால் பிறகு இதை மாத்திரைகளாக தயாரிக்க உள்ளோம்'' எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!