`கும்பலாக வன்முறையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்!' - உச்ச நீதிமன்றம் அறிவுரை

'எந்த ஒரு காரணமாக இருந்தாலும், கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவது குற்றம். அந்தச் செயலை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றம்

வட இந்திய மாநிலங்களில் பசுக் காவலர்கள் என்ற பெயரில் பசுவைக்கொண்டு அப்பாவி பொதுமக்களைத் தாக்கி கொலைசெய்த சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது, சில கும்பல் குழந்தை கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளை நம்பி குழந்தை கடத்த வந்தவர்கள் என்று அப்பாவி மக்களைத் தாக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமத்தில், குழந்தை கடத்தவந்தவர்கள் என்று எண்ணி நாடோடி இனத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கும்பலாகச் சேர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடைசெய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'எந்த ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு கும்பலாக வன்முறையில் ஈடுபட்டாலும் அது குற்றம்தான். பசுப் பாதுகாப்பு என்ற காரணமாக இருந்தாலும், குழந்தையைக் கடத்துபவர்கள் என்று எண்ணி வன்முறையில் ஈடுபட்டாலும் அது குற்றம்தான். அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. கும்பல் வன்முறையைத் தடுக்க, மத்திய அரசு, மாநில அரசுக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்' என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!