`நிபா வைரஸ் தாக்கம் இல்லை!' - அதிகாரபூர்வமாக அறிவித்தது கேரள அரசு

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கைத் திரும்பியிருந்த சூழலில், நிபா வைரஸ் இல்லையென கேரள அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளா அரசு

கடந்த மே மாதம் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் உச்சரித்த சொல் நிபா வைரஸ். பழம் திண்ணும் வௌவால்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ், கடுமையான காய்ச்சல், தலைவலி என ஆரம்பித்து 24 முதல் 48 மணி நேரத்தில் மனிதனை கோமா நிலைக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. கேரள மாநிலம் கோழிகோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கத்தால் செவிலியர் உட்பட 20 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் பலியானார்கள். மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கேரளாவின் மற்ற மாவட்டங்களுக்கு நிபா வைரஸ் பரவாமல் இருக்க கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட எல்லைகள் கடுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் மக்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், ``நிபா வைரஸ் தாக்கம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இரண்டு மாவட்டங்களும் நிபா வைரஸ் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்படுகிறது’’ என நேற்று (2.7.2018) கேரள அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்த சூழலில் கேரள அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!