`பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' - பாலியல் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!

'பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' என கேரள  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிரியார்கள்

கேரள மாநிலம் திருவல்லாவில், மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபைக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற, திருமணம் ஆன இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர்மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு முன்பு நடந்த தவறுகளைக் கூறி மன்னிப்பு கேட்டபோது, அந்தத் தவறுகளை அவரது கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பாதிரியார்கள் ஜோப் மேத்யு, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகளை   நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!