”இதுக்கெல்லாம் தலைக்கவசம் போடுறீங்க... ரோட்டுல போறப்போ?” - மும்பை போலீஸின் வைரல் ட்வீட்

மும்பை காவல்துறை

சாலைப் பாதுகாப்பு குறித்தும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், வருடம் முழுவதும் அரசு தரப்பிலிருந்தும் தனியார் தன்னார்வ அமைப்புகளிடமிருந்தும் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்த போக்குவரத்துக் காவல்துறையும் புதிய முறையில் அவ்வப்போது பிரசார முயற்சிகள் மேற்கொள்வதுண்டு. 

அந்த வகையில், மும்பை காவல்துறை தற்போது பிரபலமாக இருக்கும் 'பப்ஜி' விளையாட்டை முன்னிறுத்தி, விழிப்பு உணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. மும்பை போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பப்ஜி விளையாட்டின் போஸ்டரைப் போட்டு, "விளையாட்டில் தலைக்கவசம் அணிந்து விளையாடும் நீங்கள், ஏன் நிஜ வாழ்க்கையில் அணிய மறுக்கிறீர்கள்" என்ற வாசகத்தோடு ட்வீட் செய்துள்ளது,

"விர்ச்சுவல் விளையாட்டில் உங்கள் தலையைப் பாதுகாக்க தலைக்கவசம் அணியும் நீங்கள், ஏன் நிஜ வாழ்க்கையில் அணிவதில்லை. விளையாட்டோ வாழ்க்கையோ, எங்கேயும் ஹெல்மெட் இல்லாமல் இருப்பது ஆபத்துதான். எனவே, எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள்" இவ்வாறு ட்வீட்டியிருக்கின்றனர். இது, நெட்டிசன்களிடம் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த வரவேற்பு, இன்னும் சிலரை தலைக்கவசம் அணியவைத்தால் நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!