‘வதந்திகளைத் தடுப்பது சவாலாக உள்ளது' - மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் பதில்

வதந்திகள் தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசுக்கு தற்போது அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் குழந்தை கடத்தல் வதந்தியால் நாடு முழுவதும் பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவம் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வதந்திகளால் இதுவரை 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வாட்ஸ் அப்பில் பகிரப்படும் சர்ச்சையான கருத்துகளைத் தடுக்க வேண்டும் மற்றும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் முன்னதாகக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. 

தற்போது மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைத் தடுப்பது சவாலானதாக உள்ளதாகவும் விரைவில் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வதந்திகளைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசுக்குத் தர தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!