வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (04/07/2018)

ஒரே நேரத்தில் தேர்தல் இல்லை..! தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி

சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.ராவத்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். மேலும், மத்திய அமைச்சர்களும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுபோல தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் முக்கியக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், `நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அரசியல் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தமுடியும்' என்று தெரிவித்துள்ளார்.