`11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்?' - அம்பலப்படுத்திய சிசிடிவி காட்சிகள்

டில்லியில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணம் கடும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. தற்கொலையா அல்லது கொலையா எனும் ரீதியில் போலீஸார் விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். தற்போது கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சி மூலம் 11 பேரின் மரணம் தற்கொலைதான் என்று தெரிய வந்திருக்கிறது.

 மரணம்

டில்லியின் புராரி பகுதியில் ஒரே வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி கழுத்து இறுக்கப்பட்டு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்கள். மேலும் அந்த வீட்டில் பின்பக்க சுவரில் 11 குழாய்கள் மர்மமான முறையில் பொருத்தப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியது. இந்த 11 குழாய்களும் 11 ஆவிகள் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழி என்று வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் 11 பேரின் மரணத்தில் எந்தக் கொலை முயற்சியும் இல்லை என்று சிசிடிவி மூலம் போலீஸார் உறுதி செய்திருக்கிறார்கள். இறந்த 11 பேரில் மூத்த மருமகள் தற்கொலைக்கு நாற்காலியைக் கொண்டு செல்வதும், சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களைக் கொண்டு செல்வதும் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. 

சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!