`அரசு ஊழியர்களுக்கு கட்டாய போதைமருந்துச் சோதனை!' - சாட்டையைச் சுழற்றும் பஞ்சாப் முதல்வர் | The dope test would be made mandatory for all recruitment in Punjab

வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (05/07/2018)

கடைசி தொடர்பு:07:38 (05/07/2018)

`அரசு ஊழியர்களுக்கு கட்டாய போதைமருந்துச் சோதனை!' - சாட்டையைச் சுழற்றும் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில், போதைப் பழக்கத்தைக் குறைக்கும் நோக்கில், 'அரசு ஊழியர்களுக்குப் போதைமருந்துச் சோதனை கட்டாயமாக்கப்படும்' என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சாப் அரசு ஊழியர்கள் 3.50 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் என்று அறிவித்திருக்கிறார் பஞ்சாப் முதல்வர். 

பஞ்சாப் முதல்வர்


இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், "போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் பஞ்சாப் அரசு உறுதி மேற்கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போதைமருந்து மருத்துவச் சோதனை நடத்துவது கட்டாயமாக்க முடிவுசெய்திருக்கிறோம். ஊழியர்களைப் பணியில் சேர்த்தல், பதவி உயர்வு, வருடாந்திர மருத்துவப் பரிசோதனை என்று அனைத்து நிலைகளிலும் போதைமருந்துச் சோதனை மேற்கொள்ளப்படும். இச்சோதனை, போலீஸார் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இனி தொடர்ந்து நடத்தப்படும். இனிமேல், புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்கள் அனைவருக்கும் போதை மருந்துச் சோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

அரசு அறிவிப்பு வெளியான பிறகு, போலீஸார் மேற்கொண்ட சோதனையில் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 15 கோடி மதிப்புள்ள 3 கிலோ போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்கையில், பஞ்சாப் மாநிலத்தில் போதைமருந்து பயன்படுத்தும் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் முதல்கட்ட நடவடிக்கையை பஞ்சாப் முதல்வர் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க