காவல் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய இளம்பெண் கைது

கண்ணூர் மாவட்டம் பழையங்காடி காவல் நிலையத்துக்குள் புகுந்த இளம்பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவல் அதிகாரியையும் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

ண்ணூர் மாவட்டம் பழையங்காடி காவல் நிலையத்துக்குள் புகுந்த இளம்பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவல் அதிகாரியையும் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண் திவ்யா

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பழையங்காடி காவல் நிலையத்தில், திவ்யா என்ற இளம் பெண் திடீரெனப் புகுந்து, சப்- இன்ஸ்பெக்டர் பினுமோகனின் அலுவலக அறையைத் திறந்து உள்ளே புகுந்தார். அவரைத் தடுக்க முயன்ற பெண் காவல் அதிகாரி லீனா-வையும்  தாக்கித் தள்ளிவிட்டிருக்கிறார் திவ்யா. பின்னர், தனது இருக்கையில் அமர்ந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் பினுமோகனின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியிருக்கிறார். மேலும், பேப்பர் வெயிட்டை  எடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது எறிந்திருக்கிறார். பேப்பர் வெயிட் குறி தவறி அலமாரியின் கண்ணாடியை உடைத்தது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் திவ்யாவை மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "திவ்யாவுக்கு எதிராகக் குடும்ப வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என திவ்யா சொல்லியிருக்கிறார். பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில்தான் விசாரணை நடத்தமுடியும் என சப்-இன்ஸ்பெக்டர் பினுமோகன் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்" என்றனர்.  திவ்யாவின் இந்தத் தாக்குதல்குறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!