சுனந்தா புஷ்கர் வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன் | anticipatory bail has granted to sasi tharoor

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (05/07/2018)

சுனந்தா புஷ்கர் வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன்

சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூக்கு ஜாமின் வழங்கியது, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம். 

சசி தரூர்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர். இவர், சசி தரூருக்கு மூன்றாவது மனைவி ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசி தரூர் கொண்ட நட்பே, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்டது. இதனால், சுனந்தா புஷ்கரின் மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, சுனந்தா மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே, டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த போலீஸார், `சுனந்தா தற்கொலைசெய்துகொள்வதற்கு முன் சசிதரூக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதில், 'தனக்கு வாழப் பிடிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளதாக, சசிதரூக்கு எதிராக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சசி தரூர். இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூக்கு முன்ஜாமீன் வழங்க சிறப்புப் புலனாய்வுக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, சசி தரூக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம். மேலும், ரூ.1 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தை சசி தரூர் சமர்ப்பிக்க வேண்டும்; நீதிமன்றம் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது; ஆதாரம் மற்றும் சாட்சிகளைத் தடுக்க முயலக் கூடாது போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


[X] Close

[X] Close