வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:15:59 (05/07/2018)

கார் விபத்தில் சிக்கிய சிறுமி! - நெஞ்சைப் பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சி

உத்தரப்பிரதேசத்தில், வேகமாக வந்த கார் முன் சிறுமி பாய்ந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.  மறுபக்கத்திலிருந்து சாலையைக் கடக்க முயன்ற சிறுமி, வேகமாக வந்துகொண்டிருந்த கார் முன் பாய்ந்தார். கார் மோதியதில் அந்தச் சிறுமி சாலையில் தூக்கிவீசப்பட்டார். பலத்த காயமடைந்த சிறுமியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய அந்த கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்தில் காயமடைந்த சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பது தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவம், கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைக்கொண்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை விட்டுவிட்டு வேறு வாகனத்தை சிறைப்பிடித்தனர். காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில், விபத்து ஏற்படுத்திய கார்குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தவறுதலாகப் பிடிக்கப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய கார் குறித்த தகவலை சேகரித்துள்ளோம். ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.