வெளியிடப்பட்ட நேரம்: 04:31 (06/07/2018)

கடைசி தொடர்பு:04:31 (06/07/2018)

'வயல்களில் நின்று மந்திரம் சொன்னால் விளைச்சல் பெருகும்' - கோவாவில் ஒரு செல்லூர் ராஜூ!

"வயல்வெளியில் நின்றபடி வேத மந்திரம் முழங்கினால் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும்" என்று காமெடி செய்திருக்கிறார் கோவா மாநில  விவசாய துறை அமைச்சர், விஜய் சர்தேசாய்.

விஜய் சர்தேசாய்

கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணிக் கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், விவசாய துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் கோவாவைச் சேர்ந்த, 'சிவ யோகா பவுண்டேஷன்' என்ற அமைப்பு 'அண்டவெளி விவசாயம்' என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

விஜய் சர்தேசாய்

இந்த விவசாய முறையைத் தொடங்கி வைத்த அமைச்சர் விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம் பேசியதாவது... ``அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை. அவை, ரசாயன உரங்கள் கலக்காமல், நச்சுத் தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று, 30 நிமிடங்கள் தினமும் வேத மந்திரங்களை முழங்க வேண்டும். வேத மந்திரங்களிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால், நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும். இதற்கு, 'சிவ யோக விவசாயம்' என்று பெயர். இதனால், நிறைய விவசாயிகள் பலன் அடைந்திருக்கிறார்கள். இந்தச் சிவயோக விவசாயம், எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று சீரியஸாக பேட்டி கொடுத்திருக்கிறார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க