லீவ் எடுத்த வாலிபரை தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடித்த பெட்ரோல் பங்க் ஓனர்!

பணிக்கு சரிவர வரவில்லை என்று பெட்ரோல் பங்க்கில் வேலைசெய்தவரை தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சி, இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

வாலிபரை தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடித்த பெட்ரோல் பங்க் ஓனர்

(Photo Credit - ANI)

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டுவருகிறது. இதே பங்க்கில் வேலை செய்துவரும் ஒருவர், உடல்நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக பணிக்குச் செல்லவில்லை. இந்நிலையில், மீண்டும் பணிக்குச் சென்ற அவரை, பங்க் உரிமையாளரின் நண்பர் தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடித்துள்ளார். வாலிபரை அடிக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `அந்த பங்க்கில் வேலை செய்துவந்த வாலிபர், ஆறு நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லை. அதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அவரை தொடர்புகொண்டு பணிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, பங்குக்குச் சென்ற வாலிபரை உரிமையாளரும் அவரின் நண்பரும் சேர்ந்து அங்கிருந்த தூணில் கட்டிவைத்து சவுக்கால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, 'விபத்தில் சிக்கியதால்தான் வேலைக்கு வர முடியவிலை' என்று வாலிபர் விளக்கம் அளித்திருக்கிறார். இருப்பினும், அதை அவர்கள் பொருட்படுத்தாமல், வாலிபரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரித்துவருகிறோம்' என்றார்.


(VC - ANI)

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!