அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தை விற்கப்படுவதாகப் புகார்! - கன்னியாஸ்திரிகள் கைது

ஜார்க்கண்டில் உள்ள அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில், இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்னை தெரசா

ஜார்க்கண்டில், அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டுவருகிறது.  திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் நோக்கில் இந்தக் காப்பகம் தொடங்கப்பட்டது. காப்பகத்தில் உள்ள குழந்தைகள் விற்கப்படுவதாக, குழந்தைகள் நல வாரியத்துக்கு புகார் வந்துள்ளது. காப்பகத்தில் இருந்து தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு ரூ.40,000 முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பெறப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக  இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில்  குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில்,  பெற்றோர்களிடம் குழந்தை இல்லையெனத் தெரியவந்தது. இதையடுத்து, காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு  கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!