வீடு தேடிவரும் ரேஷன் பொருள்கள்! - டெல்லியில் அதிரடி காட்டும் கெஜ்ரிவால்  | Arvind Kejriwal says doorstep delivery of ration approved

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:05 (06/07/2018)

வீடு தேடிவரும் ரேஷன் பொருள்கள்! - டெல்லியில் அதிரடி காட்டும் கெஜ்ரிவால் 

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்
 

வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தைக்  கடந்த மார்ச் மாதம் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அனில் பைஜால் ஒப்புதல் அளிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் மேலும் சில திட்டங்களுக்கும் அனில் பைஜால் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மாநில அரசின் அதிகாரம் பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. `அரசு விவகாரங்களில் டெல்லி துணைநிலை ஆளுநர் தனிப்பட்ட முடிவெடுக்க முடியாது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருக்கிறது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து உற்சாகமாகப் பணிகளைத் தொடங்கிவிட்டார்,  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று  உணவுத்துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க