வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:07 (06/07/2018)

`ராகுலுக்குத் திருமணம் செய்துவைக்க பரிந்துரைத்தேன்!’ - தெலுங்கு தேசம் எம்.பி

ராகுல் காந்திக்கு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பதற்கு நான் சோனியா காந்தியிடம் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர் அதை நிராகரித்துவிட்டார் என்று தெலுங்கு தேசம் எம்.பி திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு தேசம் எம்பி திவாகர் ரெட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திருமண விவகாரம், அரசியல் அரங்கில் பல்வேறு காலகட்டங்களில் பேசுபொருளாக இருந்துவருகிறது. தற்போது, ராகுல் காந்தி திருமணம் குறித்துப் பேசிய தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி, 'நான், காங்கிரஸில் இருந்தபோது, உத்தரப்பிரதேசம் பிராமணர்கள் ஆதரவைப் பெறுவதற்காக, அம்மாநிலத்தைச் சேர்ந்த பிராமணப் பெண்ணை ராகுல் காந்திக்கு திருமணம் செய்துவைக்க சோனியா காந்தியிடம் பரிந்துரை செய்தேன். பிராமண சமூகம்தான் உத்தரப்பிரதேசத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால்தான், ராகுல் காந்திக்கு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கச் சொன்னேன். ஆனால், சோனியா காந்தி நான் சொல்லியதை ஏற்கவில்லை' என்று தெரிவித்தார்.