`26 சிறுமிகளைக் காப்பாற்றிய ட்வீட்!’ - விரைந்து செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள்

சக பயணி ட்விட்டரில் பதிவிட்ட புகாரையடுத்து மர்ம நபர்கள் கடத்த முயன்ற 26 சிறுமிகளை ரயில்வே அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ரயில்வே

முஸாஃபர்பூர் - பந்தரா இடையிலான ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த 26 சிறுமிகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தனர். இதைக் கண்ட சக பயணி ஒருவர் ரயில்வே அதிகாரிகளுக்கு, ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் `நான் S5 கோச்சில் பயணித்து வருகிறேன். இந்தக் கோச்சில் 25-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அழுதுகொண்டுள்ளனர்; சங்கடமான மனநிலையில் உள்ளனர்' என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் பதிவிடப்பட்ட அரை மணி நேரத்தில் வாரணாசி - லக்னோ ரயில்வே அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கம்தாங்கச் என்ற ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயிலில் ஏறி அதிலிருந்த சிறுமிகளை மீட்டனர். அந்தச் சிறுமிகளுடன் 22 மற்றும் 55 வயது மதிக்கத்த இரண்டு ஆண்கள் உடனிருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் பீகாரிலிருந்து வருவதாகத் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்டவர்கள் குறித்து அவர்களுடைய பெற்றொர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களைக் கடத்தி வந்த மர்ம நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்வே அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமிகள் 10 முதல் 14 வயதுடையது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!